பரிந்துரைக்கப்பட்ட எரிபொருள் விநியோக வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் வழங்குவதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) பிரத்யேக தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் தொடர்புடைய தகவல்களைப் பின்வரும் இலக்கங்கள் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
தொலைபேசி இலக்கங்கள்: 0112106767 / 0117296130













