யாழில், ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 2 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பருத்துத்துறை – சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே, நல்லூரடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.














