வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகருக்கு அருகிலுள்ள டன்முரி (Dunmurry) பகுதியில், பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
வட அயர்லாந்தின் டன்முரி நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
(Belfast.) பெல்பாஸ்ட் நகரின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிங்ஸ்வே (Kingsway) பகுதியில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் ஒரு கார் குண்டு (Car bomb) தாக்குதலாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார், அப்பகுதியைச் சுற்றிப் பாதுகாப்பு வேலிகளை (Cordons) அமைத்துள்ளனர்.
பாதுகாப்பு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் மேலதிக சோதனைகளை நடத்தி வருவதுடன், இது திட்டமிடப்பட்ட பயங்கரவாதச் செயலா என்பது குறித்தும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.














