இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன.
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
நிகழ்வில் பொதுமக்கள், அடியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு போரில் உயிரிழந்த மக்களுக்கு தீபமேற்றி ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதேவேளை, கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி நகரில் அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் மூடப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது வருகின்றது.
முடிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாகவும் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.














