அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 338 இலங்கை ரூபாவையும் விஞ்சியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் (CBSL) இன்று (19) அறிவிக்கப்பட்ட தினசரி மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி 328.2351 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 338.0729 ரூபாவாகவும் உள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வன மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 326.74 ரூபாவாகவும், 334.26 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.













