2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு, தற்போதைய நீர் கட்டணதை எந்தவித திருத்தமும் இன்றித் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த ஒரு முன்மொழிவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2024 ஜூலை 15 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட நீர் கட்டண சூத்திரத்தின்படி, முக்கிய செலவுக் காரணிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, நீர் விற்பனையின் அலகு விலை ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
இருப்பினும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பின் 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஒரு பகுப்பாய்வில், அந்த நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்ட தற்போதுள்ள நீர் கட்டணங்கள் போதுமானதாக இருப்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பணிப்பாளர்கள் குழு, 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தற்போதைய நீர் கட்டணத்தை எந்த உயர்வும் இன்றித் தொடர முடிவு செய்துள்ளது.
















