• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/18
in இலங்கை, மலையகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட தகவல் முகாமைத்துவ முறைமை பொலிஸாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வருடாந்தம் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா 2026.08.18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகி, 2026.08.28 ஆம் திகதி வரை நகர்வலம் நடைபெறவுள்ளது. 

இதனை முன்னிட்டு இலங்கை பொலிசாரால் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, வீதித் தடைகள் ஏற்படுத்துதல், பாதுகாப்புக் கடமைகள், வாகனங்கள் மற்றும் தனிநபர்களைச் சோதனை செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல், வாகனத் தரிப்பிட வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட தகவல் முகாமைத்துவ முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இம் முறைமையின் ஊடாக கண்டி எசல பெரஹெராவைக் கண்டுகளிப்பதற்காக வருகை தரும் பக்தர்ர்கள், பெரஹெரா நடைபெறும் காலப்பகுதியில் பின்வரும் விடயங்கள் தொடர்பான நேரடியாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்கமைய,

வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வாகனத் தரிப்பிடங்கள் தொடர்பான தகவல்கள்

பெரஹெரா ஊர்வலமாக பவனிவரும் வீதிகள்.

பெரஹெராவைக் கண்டுகளிப்பதற்குப் பொருத்தமான இடங்கள்

சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்

வழிதவறியவர்களைத் தொடர்புகொள்ளக்கூடிய இடங்கள்

இம் முறைமைக்குள் பிரவேசிப்பதற்கான வழிமுறைகள்

இலங்கை பொலிஸ் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk இற்குள் பிரவேசித்து, “கண்டி எசல பெரஹெரா” என்ற இணைப்பைத் தெரிவு செய்வதன் மூலம் இந்த முறைமைக்குள் பிரவேசிக்க முடியும்.

பெரஹெராவை முன்னிட்டு விசேடமாக உருவாக்கப்பட்டுள்ள kandyesalaperahera.police.lk இணையத்தளத்தின் ஊடாகவும் உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இச் சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்களும் பக்தர்களும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, நிகழ்நேரத் தகவல்களின் அடிப்படையில் விரைவானதும் இலகுவானதுமான சேவையைப் பெற்றுக்கொண்டு தமது நேரத்தைச் சேமித்துக்கொள்ள முடியும்.

மேலும், அனைத்து இடங்களிலும் கையடக்கத் தொலைபேசி, டெப் கணினி அல்லது கணினி ஊடாக இச் சேவையைப் பயன்படுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரஹெரா காலப்பகுதியில் பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இம் முறைமை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகவே, பெரஹெராவைக் கண்டுகளிப்பதற்காக வருகை தரும் போது இச் சேவையைப் பயன்படுத்தி தமது பயணத்தை இலகுவாகவும் வசதியாகவும் திட்டமிட்டுக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

May be an image of text

Related

Tags: Esala PeraheraKandyஎசல பெரஹராகண்டிபொலிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கஞ்சிபான் இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட 5 பேர் கைது!

Next Post

சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

Related Posts

சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!
ஆசிரியர் தெரிவு

சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

2026-08-18
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது
இலங்கை

கஞ்சிபான் இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட 5 பேர் கைது!

2026-08-18
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?
இலங்கை

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

2026-08-18
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
ஆசிரியர் தெரிவு

22 ஆவது திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் தாக்கல்!

2026-08-18
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-08-18
எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!
இந்தியா

எல்லைகளில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கும் சீனா!

2026-08-17
Next Post
சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

0
கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

0
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

கஞ்சிபான் இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட 5 பேர் கைது!

0
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் தாக்கல்!

0
சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

2026-08-18
கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

2026-08-18
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

கஞ்சிபான் இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட 5 பேர் கைது!

2026-08-18
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

2026-08-18
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

22 ஆவது திருத்த சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் தாக்கல்!

2026-08-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.