நாட்டின் சில பகுதிகளில் நிலவும் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மூன்று மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு குறித்த முன்கூட்டிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த மண்சரிவு எச்சரிக்கை நாளை (23) அதிகாலை 3:00 மணி வரை அமுலில் இருக்கும்.
இதனால், குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, கேகாலை, களுத்துறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல பகுதிகளுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.














