கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பொலிஸாருக்கு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், பொலிஸ் பிரிவு, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை சட்டத்தரணியுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது, முதல்வர், பாலியல் குற்ற வழக்கினை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தினார். வழக்கினை முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













