காசாவில் செவ்வாய்க்கிழமை (26) நடத்திய தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவுத் தளபதி மொஹமட் ஓடே (Mohammed Odeh) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஓடேயின் நடமாட்டம் பல மாதங்களாகக் கண்காணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பதுங்கியிருந்த கட்டிடங்கள் குறிவைக்கப்பட்டதாக ஷின் பெட் (Shin Bet) என அறியப்படும் இஸ்ரேலிய பாதுகாப்பு முகமையும் அதன் இராணுவமும் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளன.
இதேபோன்ற ஒரு தாக்குதலில் அவரது முன்னோடி கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
காசா நகரின் மிகவும் பரபரப்பான சந்தைப் பகுதிகளில் ஒன்றில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து முஸ்லிம் பண்டிகையான ஈத் அல்-அதாவுக்கு முன்னதாக,
செவ்வாய்க்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில், குறைந்தது மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் மருத்துவர்களும் சாட்சிகளும் தெரிவித்தனர்.
ஹமாஸுடன் போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், காசா மீது இஸ்ரேல் நடத்திய அண்மைய கொடிய தாக்குதல் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.













