முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் உள்ள ஒரு இராணுவத் தளத்தைக் குறிவைத்து, அமெரிக்க இராணுவம் ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஹார்முஸ் நீரிணையை சுற்றி அச்சுறுத்தலை ஏற்படுத்திய நான்கு ஈரானிய தாக்குதல் ட்ரோன்களை தங்கள் படைகள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.
ஐந்தாவது ட்ரோனை ஏவவிருந்த நேரத்தில் பந்தர் அப்பாஸில் உள்ள தளம் தாக்கப்பட்டதாக சென்ட்காம் கூறியது.
அதேநேரம், நகரின் கிழக்குப் பகுதியில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் ஒரு நிலையற்ற போர்நிறுத்தத்திற்கு மத்தியிலும், ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்தை முடக்கி, உலகளாவிய எரிசக்தி விலைகளைக் கடுமையாக உயர்த்திய மூன்று மாதப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நீடித்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
தற்காப்புக்காக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா ஈரானில் உள்ள இலக்குகளைத் தாக்குவது மூன்று நாட்களில் இது இரண்டாவது முறையாகும்.
மீண்டும் தொடங்கியுள்ள இந்த மோதல்கள் போர் நிறுத்தத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன.
















