கடந்த மே மாதத்தில் இங்கிலாந்தில் வீட்டு விலைகள் எதிர்பாராதவிதமாக சரிந்ததாக பிரிட்டிஸ் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான ஹாலிஃபாக்ஸ் (Halifax) இன்று (05) வெளியிட்ட தரவுகளில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகரித்த கடன் செலவுகள் மற்றும் ஈரான் போரினால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை ஆகியவை இங்கிலாந்தில் நுகர்வு தேவையைப் பாதித்துள்ளதால் சந்தையில் நிலவும் மந்தநிலையின் அண்மைய அறிகுறியாக இது அமைந்துள்ளது.
அதன்படி, 2026 ஏப்ரல் மாதத்தைப் போலவே, மே மாதத்திலும் இங்கிலாந்தில் வீட்டு விலைகள் மாதாந்திர அடிப்படையில் 0.1% சரிந்துள்ளன.
இது தொடர்ச்சியாக மூன்றாவது மாத சரிவு என்று ஹாலிஃபாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து இங்கிலாந்தில் சராசரி வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன.
இந்த மோதலின் காரணமாக, இங்கிலாந்து வங்கி இந்த ஆண்டின் பிற்பகுதியில் வட்டி விகிதங்களைக் குறைப்பதற்குப் பதிலாக உயர்த்தும் என்று நிதிச் சந்தைகள் இப்போது எதிர்பார்க்கின்றன.















