சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ( Xi Jinping) அடுத்த வாரம் வட கொரியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கும் இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தின்போது, ஜனாதிபதி ஜி ஜின்பிங், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னைச் ((Kim Jong Un) சந்திப்பார் என சீன அரசு ஊடகமான சின்ஹுவா (Xinhua) இன்று (05) தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் அரசு நடத்தும் செய்திச் சேவையான KCNA-வும் இந்தப் பயணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீன ஜனாதிபதி வட கொரியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
மேலும், தனது அண்டை நாட்டுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனால் பெரும்பாலும் சிக்கலான உறவை மேம்படுத்துவதற்காக பெய்ஜிங் எடுக்கும் அண்மைய முயற்சியாகவும் இந்தப் பயணம் அமையவுள்ளது.
அத்துடன், இந்த ஆண்டில் ஜி ஜின்பிங் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமும் இதுவாகும்.
அணு ஆயுதங்களைக் கொண்ட தனது அண்டை நாடான ரஷ்யாவுடன் நெருங்கிய உறவை வலுப்படுத்த சீனா எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமையவுள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் யொங் உன் (Kim Jong Un ), அண்மைய ஆண்டுகளில் உக்ரேனுக்கு எதிரான போருக்கு ஆதரவாக வீரர்களையும் வழக்கமான ஆயுதங்களையும் அனுப்பி ரஷ்யாவுடன் நல்லுறவை ஏற்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.













