உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே வகிபாகம் என்ன..?? நூற்றுக்கணக்கான மக்களின் உயர்களை காவு கொண்ட தற்கொலைக் குண்டு தாக்குதலுக்கு சுரேஷ் சலே முன்னெடுத்திருந்த நடவடிக்கைகள் தொடர்பான உண்மைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சதி திட்டம் எவ்வாறு தீட்டப்பட்டது என்பதை இன்று மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெறுவதற்கு 3 வாரத்துக்கு முன்னர், சுரேஷ் சலே, நீர்கொழும்பு பகுதிக்கு நான்கு பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட பூஜைக்கு கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை திரட்டியுள்ளமை தெரியவந்துள்ளது.
(பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்ஆனந்த விஜேபால:)
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் ஈடுபட்டிருந்த, தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஷ் சலே நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்தார். அதேபோன்று, குண்டுத்தாக்குதலுக்கு உதவி ஒத்தாசை வழங்கியுள்ளார். இந்த விடயங்கள் அனைத்தும்
தீவிரமான விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நீர்கொழும்பு பகுதிக்கு அனுப்பப்பட்ட நான்கு பேரில் ஒருவர்,
இஸ்லாம் அடிப்படைவாதியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஐ.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்
எனினும், அவர் தற்போது வரை காணமால் போயுள்ளார். தாக்குதல் நடத்தப்படும் வரை இஸ்லாம் அடிப்படைவாதிகளை பயன்படுத்தி, பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டமை விசாரணைகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளும்,
முக்கிய விபரங்களும் வெளியில் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, மிக முக்கியமான மற்றும் இரகசியமான தகவல்கள் வெளிவருவதைத் தடுப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை சுரேஷ் சலே முன்னெடுத்திருந்தார்
இதேவேளை சுரேஷ் சலே தன்னிடமுள்ள கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றின் கடவுச்சொற்களை இதுவரையில் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்க மறுத்துள்ளதாகவும், அவர் விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டியிருந்தார்.

(பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்ஆனந்த விஜேபால:)
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய கொடூரமான பயங்கரவாதச் செயற்பாடுகள்,
சுரேஷ் சலே முழுமையாக அறிந்தே சதியில் ஈடுபட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது. சுரேஷ் சலே தன்னிடமுள்ள கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றின் கடவுச்சொற்களை இதுவரையில் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கவில்லை.
2019ஆம் ஆண்டு 07ஆம் மாதம் 21ஆம் திகதி இந்த தாக்குதல் இடம்பெறும் வரையில்இஸ்லாமிய தீவிரவாதிகளை சுரேஷ் சலேவே வழிநடத்தியுள்ளார். இதற்கான ஆதரங்கள் கிடைத்துள்ளன. இந்த தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை பாணந்துறை பொசாரினால் அறிவுறுத்தப்பட்டது. எனும் அந்த எச்சரிக்கை உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் இராணுவ உயர் அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் வழிநடத்தப்பட்டமை விசாரணைகளில் தெளிவாகியுள்ளது. எனினும் சில கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களை பின்னர் விடுவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவரை சுரேஸ் சாலே கலதாரி ஹோட்டலுக்கு அழைத்துள்ளார்.அங்கு அந்த நபரிடம் சுரேஸ் சாலே மன்னிப்பு கோரியுள்ளார். இந்த விடயம் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிநலையில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டு வழிடத்திஇந்த நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவித்தவர் சுரேஸ் சாலே என்பது திட்டவிட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற நடவடிக்கைகளுக்கும் சுரேஷ் சலேவிற்கும் இடையிலான தொடர்பு என்ன என்பதும் மற்றும் கைது செய்யப்பட்டு விசாரணக்கு உட்படுத்தப்பட்ட விடயங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
(பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்ஆனந்த விஜேபால:)
சந்தேக நபருக்கு சட்டத்தரணிகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் சட்ட ஆலோசனை பெறவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, சந்தேக நபர் அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரது கைதுக்கான காரணங்கள் அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு விளக்கப்பட்டது, கைது செய்யப்பட்ட நபருக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ ரசீது அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. சந்தேக நபரின் கைது மற்றும் தடுப்புக்காவல் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அவர் கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவுகளுக்குப் பின்னர், அதன் பிரிவு 9-இன் சட்ட விதிகளுக்கு இணங்க, அவரை 90 நாட்களுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக்காவலில் வைப்பதற்கான தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன
B 35882/1/2024 என்ற வழக்கு எண்ணின் கீழ் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் உண்மைகளைத் தெரிவித்ததன் மூலம்
சுரேஷ் சலே மூன்றாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார், வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இதுகுறித்து சந்தேக நபரின் நெருங்கிய உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு புதன்கிழமையும் தனது வழக்கறிஞரைச் சந்தித்துத் தேவையான சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனது மனைவி, தாய் மற்றும் நெருங்கிய உறவினர்களைத் தொலைபேசியில் அழைத்துத் தனது நலம் விசாரிப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் நெருங்கிய உறவினர்களைச் சந்திப்பதற்கும்,
வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவு, உடை மற்றும் பிற பானங்களை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
திருத்தப்பட்ட சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, கோட்டை நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறை அறைக்குச் சென்று சந்தேக நபரை ஆய்வு செய்தார்.
மேலும், தனக்கு சித்திரவதை அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக சந்தேக நபர் நீதவானிடம் எந்தப் புகாரும் அளிக்கவில்லை நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க, கொழும்பு நீதி மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பிரதம நீதி மருத்துவ அதிகாரி ஸ்ரீயந்த அமரரத்னவின் பரிந்துரைகளின் பேரில், சந்தேக நபர் சிறப்பு மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவருக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது சுரேஷ் சலே, கொழும்பு தேசிய மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் ஜனக அகரவிட்டவிடம் அனுப்பப்பட்டு, அவரது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட தடிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.
அவர் சிறப்பு ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் எச். எம். என். பி. ஹேரத்தின் கீழ் பரிசோதிக்கப்பட்டு, ஒரு ஊட்டச்சத்து நிரப்பியும் ஒரு விட்டமினும் வழங்கப்பட்டன.
மேலும், சுகாதார 272 படிவத்தைப் பயன்படுத்தி இராசாயன ஆய்வகப் பரிசோதனைகளுக்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டன. சந்தேக நபர் சிறப்பு மருத்துவர் காமினி பத்திரனவிடம் அனுப்பப்பட்டு,
பரிந்துரைக்கப்பட்ட எம்.ஆர்.ஐ பரிசோதனை கொழும்பு தேசிய மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது,
அதன் அறிக்கைகளுடன் சந்தேக நபர் மீண்டும் தேசிய கண் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் கே.ஆர். தயாவன்சவிடம் அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டார். சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட நேரத்தில், அவரது காதுப் பிரச்சினைக்கு சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவரிடம் அவர் அனுப்பப்பட்டார்,
காணாமல் போன செயற்கைப் பல்லை முறையாகச் சரிசெய்து சீரமைப்பதற்காக ஒரு பல் மருத்துவரிடமும் அவர் அனுப்பப்பட்டார்.
அத்துடன் பல விடயங்கள் வெளிவருகின்ற நிலையில் ஒரு தரப்பினர் கலக்கமடைந்து கோட்டை புகையிரத நிலையம் முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டாலும் அதற்கு அடிபணியப் போவதில்லை என்றும் சட்டத்தின் பிரகாரமே விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
(பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்ஆனந்த விஜேபால:)
சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட நாள் முதல் விசாரணைக்கு எந்தவிதமான சாதகமான உதவியும் வழங்கப்படவில்லை.
சுரேஷ் சலேவின் கைவசம் இருந்து கைப்பற்றப்பட்ட நவீன ஆப்பிள் கைபேசி மற்றும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினி ஆகியவற்றின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்யத் தேவையான கடவுச்சொற்களை வழங்க மறுப்பதன் மூலம்,
அவர் உண்மைகளை மூடிமறைக்க முயற்சிக்கிறார். இருப்பினும், இதுவரை பெறப்பட்ட மற்ற அனைத்து அறிவியல் மற்றும்
தொலைபேசி ஆதாரங்களும், இந்த சதித்திட்டம் குறித்து சந்தேக நபர் முன்கூட்டியே அறிந்திருந்தே செயல்பட்டுள்ளார் என்பதைத் தெளிவாக நிறுவியுள்ளன. மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் மூன்று பேர் மீது பயணத் தடை விதிக்கப்பட்டு, அவரது தடுப்புக் காவல் உத்தரவு மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட பின்னர்,
சுரேஷ் சலே அதுவரை நடந்துகொண்ட விதத்தை முற்றிலுமாக மாற்றி, விசாரணையைத் தடுத்து, அதற்குப் பாதகமாக நடந்துகொள்வதோடு, உண்ணாவிரதத்தையும் தொடங்கியுள்ளார்.
சுரேஷ் சலேயின் சகோதரரும் மகனும் கொண்டுவந்த உணவைக்கூட அவர் மறுத்ததால், பொலிஸ் மருத்துவமனையின் மருத்துவப் பணிப்பாளர்களான தினுக சேனரத்ன மற்றும் வைத்தியர் சந்தீரா நுவன் ஆகியோரால் அவர் பரிசோதிக்கப்பட்டார். சந்தேக நபரின் இரத்தச் சர்க்கரை அளவு குறைந்திருந்ததால்,அவர் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
தற்போது பொலிஸ் வார்ட் இரண்டின் மருத்துவ மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், எந்தவொரு உண்ணாவிரதப் போராட்டத்திற்கோ அல்லது சத்தியாகிரகத்திற்கோ அடிபணிந்து இந்த விசாரணைகளை நிறுத்த அரசாங்கம் தயாராக இல்லை, விசாரணைகள் முறைப்படி தொடரும்













