பிரித்தானியாவில் ஏற்கனவே குடியேறி வசித்து வரும் வெளிநாட்டுப் பராமரிப்பு ஊழியர்களின் விசா மற்றும் நிரந்தரக் குடியிருப்பு விதிகளில் மாற்றம் செய்வது முற்றிலும் தவறான ஒரு செயலாகும் என முன்னாள் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கத்தின் குடிவரவுக் கொள்கைகள் மீதான தனது விமர்சனத்தை அவர் மீண்டும் பதிவு செய்துள்ளார்.
குடிவரவு விதி மாற்றங்கள் குறித்துப் பிரித்தானிய அரசாங்கம் ஆலோசனைகளைப் பெற்று வந்தாலும், ஏற்கனவே நாட்டில் இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிரந்தரக் குடியிருப்புரிமை குறித்த இறுதி முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அரசாங்கம் குடியேற்றக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க முயன்று வரும் வேளையில், நாட்டின் சுகாதார மற்றும் பராமரிப்புத் துறையைத் தாங்கிப் பிடிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















