பிரிட்டனின் வார்விக்ஷயர் கவுன்சில் (Warwickshire County Council) தலைவரும், ‘ரிஃபார்ம் யுகே’ கட்சியின் முக்கிய பிரமுகருமான ஜார்ஜ் ஃபின்ச் (George Finch) மீது, ‘வார்விக்ஷயர் பிரைட்’ (Warwickshire Pride) என்ற எல்ஜிபிடி+ சமூக நல அமைப்பு அதிகாரப்பூர்வமாக நடத்தை விதிமுறை மீறல் புகாரை அளித்துள்ளது.
கவுன்சிலுக்கு உட்பட்ட பொது நூலகங்களில் இருந்து “சர்ச்சைக்குரிய பாலினக் கொள்கைகள்” மற்றும் திருநங்கையர் தொடர்பான விபரங்களைக் கொண்ட புத்தகங்களை அகற்ற வேண்டும் என ஜார்ஜ் ஃபின்ச் தெரிவித்த கருத்தே இந்த புகாருக்குக் காரணமாகும்.
கடந்த திங்கட்கிழமை ஜார்ஜ் ஃபின்ச் இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததார்.
அதில் , மாறுபட்ட பாலினக் கொள்கைகளை குழந்தைகளுக்கு முற்றிலும் உண்மையானவை என்று போதிக்கக் கூடாது எனவும் இது தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து தனக்கு பல புகார்கள் வந்துள்ளதால், நூலகங்களுக்கான புதிய கொள்கை ஒன்று விரைவில் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
கவுன்சில் தலைவரின் இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக ‘வார்விக்ஷயர் பிரைட்’ அமைப்பு, நடத்தை விதிமுறை மீறல் புகாரை அளித்துள்ளது.















