முள்ளிவாய்க்காலில் யுத்தத்தினால் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பொதுத் தூபிக்கு இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று (21) விஜயம் மேற்கொண்டிருந்த அவர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களையும் இடங்களையும் பார்வையிட்டார்.
அதன் ஒரு பகுதியாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குச் சென்ற சத்தியன், யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள பொதுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி தனது அஞ்சலியைத் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு அவர் மேற்கொண்ட வருகையானது யுத்தத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் நினைவுகளை சுமந்து இந்திய கலைஞர் ஒருவர் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.













