மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெர்குசன் வீதியில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் (CCDB) அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, ஐந்து கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் (01) கிடைத்த தகவலின் அடிப்படையில், 40 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது 5 கிலோ கிராம் 140 கிராம் ஹெரோயின், போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 50,000 ரூபாய் பணம் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கைபேசிகள் ஆகியவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
கொழும்பு 10-ஐச் சேர்ந்த சந்தேகநபர் மட்டக்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














