இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று (02) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் தொடரானது 2025–2027 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ளது.
இதனால் இரு அணிகளுக்குமே இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளதால், இந்தத் தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

















