இங்கிலாந்தின் கடல் பகுதிகளில் தற்சமயம் நிலவும் வெப்ப நிலை அடுத்த வாரம் தீவிர நிலையை எட்டக் கூடும் என்பதனால் வானிலை ஆய்வு நிலையம் கடுமையான வெப்ப அலை தாக்கம் குறித்து புதிய எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் பெரும்பகுதி முழுவதும் இங்கிலாந்து கடல் பகுதிகளை ஆட்கொண்டுள்ள நீண்டகால கடல்சார் வெப்ப அலை அடுத்த வாரம் தீவிரமடையவுள்ளது.
அப்போது வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸை எட்டும் என்று தேசிய வானிலை ஆய்று நிலையம் கணித்துள்ளது.
வடமேற்கு ஐரோப்பியக் கடல்களின் மேற்பரப்பு நீர்நிலைகள் தற்போது மிதமானது முதல் கடுமையானது வரையிலான கடல் வெப்ப அலை நிலைகளை எதிர்கொண்டு வருகின்றன.
இந்த உயர்ந்த வெப்பநிலையானது, நீரின் வெப்பநிலை வழக்கமான அளவை விட சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் அதிகமாகி, வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் காணப்படும் நிலையை ஏற்கனவே எட்டிவிட்டது என்றும் வாலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கடற்கரைப் பகுதிகளின் சில இடங்களில், வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
சாதனை அளவிலான இந்த வெப்பநிலை மாற்றங்கள் வானிலை அமைப்புகள், உலகளாவிய காலநிலை மற்றும் சூழல் மண்டலங்களில் பரவலான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், இதனால் மீன் இனங்களின் பரவலில் மாற்றங்கள் ஏற்பட்டு பல கடல்வாழ் உயிரினங்களுக்குக் கடுமையான பாதிப்புகள் உண்டாகலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் கடந்த வாரத்தில் ஐரோப்பாவில் நிலவிய முன்னெப்போதும் இல்லாத வெப்ப அலைக்குப் பின்னரே கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.














