• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

Hanushya P by Hanushya P
2026/07/04
in Uncategorized
66 2
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75ஆவது ஆண்டு நிறைவு விழா பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று கொழும்பு Galle Face ஹோட்டலில் நடைபெற்றது.

இங்கு விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,

blank

ஆசியாவின் பெரும்பாலான நாடுகள் சுதந்திரத்தை நோக்கிய தமது பயணத்தில் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்திருந்த ஒரு காலகட்டத்திலேயே அதாவது இதற்கு 75 வருடங்களுக்கு முன்னரே இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தை எமது நாட்டின் ‘கொழும்பு’ என்ற பெயரைக் கொண்டு அழைக்கப்படுவதும் அதற்கான உபசரிப்பை வழங்கக் கிடைத்தமையும் ஒரு நாடு என்ற வகையில் எமக்கு பெருமை சேர்க்கின்றது.

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல்,  நிலையான போக்குவரத்து முறைமைகள் மற்றும் வலுவான விநியோகச் சங்கிலி வலையமைப்புகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கும் தற்போதைய பின்னணியில் கொழும்புத் திட்டத்தின் கீழ் இந்நாட்டின் வலுசக்தி, விவசாயம் நீர்ப்பாசனம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகால முதலீடுகள் இன்றும் இலங்கையின் அபிவிருத்தியின் அடித்தளத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றன.

blank

அதேபோன்று, குறிப்பாகஇ இளைஞர்கள் பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் போதைப்பொருள் ஒழிப்பிற்காக கொழும்புத் திட்டத்தின் ‘போதைப்பொருள் ஆலோசனை நிகழ்ச்சி’ ஆற்றிவரும் சேவை பாராட்டத்தக்கதாகும். ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான இலங்கை அரசாங்கம் பொதைப் பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளது. அதற்காகக் கொழும்புத் திட்டம் வழங்கும் ஒத்துழைப்பை நாம் பாராட்ட வேண்டும்.

தொழினுட்ப மாற்றங்கள், காலநிலை சவால்கள் மற்றும் புவிசார் அரசியல் செல்வாக்குகள் காரணமாக இன்றைய உலகம் 1951ஆம் ஆண்டை விட மிகவும் வித்தியாசமானதாகவும் சிக்கலானதாகவும் மாறியுள்ளது. இச்சூழலில் கொழும்புத் திட்டம் போன்ற பிராந்திய அமைப்புகளின் பங்களிப்பு தற்காலத்திற்கு ஏற்றவாறு மேலும் விரிவானதாகவும் நெகிழ்வுத்தன்மை மிக்கதாகவும் அமைய வேண்டும். அத்துடன் கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தித் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், புதிய தலைமுறையினரிடையே சர்வதேச ஒத்துழைப்பின் மதிப்பை எடுத்துரைக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.

கடந்த நான்கு வருடங்களாக கொழும்புத் திட்டம் அமைப்பின் பொதுச்செயலாளராக குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றி விடைபெறும் கலாநிதி பெஞ்சமின் பி. ரெய்ஸ் அவர்களுக்கு இதன்போது விசேட பாராட்டு வழங்கப்பட்டதோடு, கொழும்புத் திட்டத்தின் புதிய பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சூளாமி சார்ட்சுவான் (H.E. Chulamee Chartsuwan) அவர்களும் இதன்போது அன்போடு வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் விசேட நினைவு முத்திரையும்”Colombo Plan 75 Years – 75 Stories” ‘ எனும் விசேட நூலும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர,  இலங்கைக்கான வியட்நாம் தூதுவரும் கொழும்புத் திட்டம் அமைப்பின் பேரவைத் தலைவியுமான த்ரின் தி டாம் (Trinh Thi Tam) உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Related

Tags: 75th AnniversaryColombo PlanPrime Minister Dr. Harini Amarasooriyaspecial address
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

Next Post

கடற்பகுதிகளில் வானிலை மாற்றம்! பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

Related Posts

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
Uncategorized

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 740 நபர்கள் கைது!

2026-08-14
உக்ரேன் மீது ரஷ்யா கொடிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு!
Uncategorized

உக்ரேன் மீது ரஷ்யா கொடிய தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு!

2026-07-03
வெசாக் வாரத்தில் மயிலிட்டியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்த தமிழ் தரப்பினருக்கு காணி உரிமையாளர்கள் அழைப்பு!
Uncategorized

வெசாக் வாரத்தில் மயிலிட்டியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்த தமிழ் தரப்பினருக்கு காணி உரிமையாளர்கள் அழைப்பு!

2026-05-22
புத்தாண்டு அனைத்து மக்களுக்கும்  சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!
Uncategorized

புத்தாண்டு அனைத்து மக்களுக்கும் சுபீட்சத்தையும், முன்னேற்றத்தையும் வழங்க வேண்டும்!

2026-04-14
பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை
Uncategorized

பொய்க்குற்றச்சாட்டு வேண்டாம்! – சாணக்கியனுக்கு அமைச்சர் சந்திரசேகர் எச்சரிக்கை

2026-04-10
தேசிய மக்கள் சக்தி எம்.பி.யின் வாகனம் விபத்து!
Uncategorized

தேசிய மக்கள் சக்தி எம்.பி.யின் வாகனம் விபத்து!

2026-03-30
Next Post
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

கடற்பகுதிகளில் வானிலை மாற்றம்! பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியானது

உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மீது தாக்குதல்!

உக்ரைன் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மீது தாக்குதல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
சந்திமாலுக்கு காயம்: ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதி!

சந்திமாலுக்கு காயம்: ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதி!

0
1 பில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரம்: புதிய அப்டேட்!

1 பில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரம்: புதிய அப்டேட்!

0
கெஹலியவுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

கெஹெலிய ரம்புக்வல இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

0
அமெரிக்காவின் பங்காளியான ஓமன் மீது குண்டுவீசுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

அமெரிக்காவின் பங்காளியான ஓமன் மீது குண்டுவீசுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

0
சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

0
சந்திமாலுக்கு காயம்: ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதி!

சந்திமாலுக்கு காயம்: ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதி!

2026-08-18
1 பில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரம்: புதிய அப்டேட்!

1 பில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரம்: புதிய அப்டேட்!

2026-08-18
கெஹலியவுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

கெஹெலிய ரம்புக்வல இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

2026-08-18
அமெரிக்காவின் பங்காளியான ஓமன் மீது குண்டுவீசுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

அமெரிக்காவின் பங்காளியான ஓமன் மீது குண்டுவீசுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

2026-08-18
சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

2026-08-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.