இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பொலிஸ் துறையின் தலைமைத்துவம் போதுமான தரம் கொண்டதாக இல்லை என்றும், அதில் அவசரமாக ஒரு பாரிய சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் முக்கிய சுயாதீன ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
பொலிஸ் தலைமைத்துவ ஆணையத்தால் இன்று வெளியிடப்பட்ட இந்த மைல்கல் அறிக்கையில், தகுதியான தலைவர்களைக் கண்டறிந்து அவர்களை உருவாக்குவதற்கான தற்போதைய நடைமுறை மிகவும் பலவீனமாக உள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, பல பிராந்தியங்களில் உள்ள ‘சீஃப் கான்ஸ்டபிள்’ (Chief Constable) எனப்படும் தலைமைப் பொலிஸ் அதிகாரி பதவிகளுக்கு, பெரும்பாலும் ஒரே ஒரு தகுதியான வேட்பாளர் மட்டுமே போட்டியிடும் நிலை உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
பொலிஸ் சேவையில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் மன உறுதியும் , ஊக்கமும் மிகவும் குறைந்து காணப்படுவதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதனைச் சரிசெய்ய, பொலிஸ் துறையில் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் பதவி உயர்வு வழங்கும் நடைமுறைகள் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












