பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக வரவுள்ள ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் பாரிய மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
மான்செஸ்டர் நகரில் அவர் வெற்றிகரமாக முன்னெடுத்த ‘பீ நெட்வொர்க்’ (Bee Network) பொதுப் போக்குவரத்துத் திட்டம், நாடு தழுவிய ரீதியில் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த பேருந்து சேவைகள், உள்ளூர் சபைகளின் பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.
அதேநேரம், 2027ம் ஆண்டின் இறுதிக்குள் பிரித்தானியாவின் ஒட்டுமொத்த பயணிகள் ரயில் சேவைகளும் ‘கிரேட் பிரிட்டிஷ் ரெயில்வேஸ்’ (Great British Railways) என்ற புதிய அமைப்பின் கீழ் முழுமையாகத் தேசியமயமாக்கப்படவுள்ளன.
லண்டன் நகருக்கு இணையான குறைந்த கட்டண மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதிகளை நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் வழங்குவதே இதன் முக்கிய நோக்கமென பர்ன்ஹாம் குறிப்பிட்டுள்ளார்.












