நாட்டிங்ஹாமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூன்றாவது சர்வதேசப் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி, இந்தியாவை 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ஃபில் சால்ட் 70 ஓட்டங்களை எடுக்க போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 201-7 ஓட்டங்களை குவித்தது.
மறுபுறம், டி20 உலக சாம்பியனான இந்திய அணி வெறும் 12 ஓவர்களுக்குள்ளேயே 76 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
இந்திய அணியின் இந்த ஓட்ட எண்ணிக்கை இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபில் சால்ட்டின் தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை விட சற்று அதிகமாகும்.
சேஸிங்கில் இந்திய அணி சார்பில் நான்கு வீரர்கள் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களை எடுத்தனர்.
துடுப்பாட்டத்தில் இந்திய வீரர்களுக்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் ஆகியோரை எதிர்கொள்வது மிகவும் சவாலானதாக அமைந்தது.
புதிய பந்தைக் கொண்டு வீசிய இந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருவரும் மணிக்கு 90 மைலுக்கும் (145 கி.மீ) அதிகமான வேகத்தில் பந்துவீசி, இந்திய அணியின் முன்னணி வரிசை துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலையச் செய்தனர்.
ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக கைப்பற்றினர்.
ஓட்ட வித்தியாசத்தின் அடிப்படையில் இது இந்தியாவின் மிக மோசமான டி20 சர்வதேச தோல்வியாகும்.
முன்னதாக இந்திய அணி வெலிங்டனில் 2019 ஆம் ஆண்டில் நியூஸிலாந்திடம் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
நான்காவது போட்டி பிரிஸ்டலில் நாளை ஆரம்பமாகும்.
கடந்த மாதம் பெல்ஃபாஸ்டில் அயர்லாந்திடம் இந்தியா 2-0 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமான தொடர் தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
















