அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சட்டப்பூர்வமாக விற்கப்படும் உயர்தர “காலி வீட்” கஞ்சாவைப் போல போலியாகத் தயாரிக்கப்பட்ட மலிவு விலை கஞ்சாவைக் கடத்தல் கும்பல்கள் பிரிட்டனின் வடக்குப்பகுதிகளில் பெருமளவில் குவித்து வருவதாக புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பிரிட்டனுக்குப் பெருமளவில் இந்த போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகிறது.
கலிபோர்னியாவில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் வளர்க்கப்படும் அதிக வீரியம் கொண்ட கஞ்சா வகைகளுக்குப் பிரிட்டன் கருப்புச் சந்தையில் பெரும் வரவேற்பு நிலவுகிறது.
இதனைப் பயன்படுத்தி, தாய்லாந்தில் கஞ்சா பயிரிடும் கும்பல்கள் போலியான “காலி வீட்” கஞ்சாவை பிரிட்டனுக்குக் கடத்துகின்றன.
பிரிட்டன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் 1,67,000 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு £2 பில்லியன் ஆகும்.
இது பிரிட்டன் வரலாற்றிலேயே இதுவரை பதிவு செய்யப்படாத மிக அதிகபட்ச பறிமுதலாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.














