மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை இருக்கும்.
மன்னார் வழியாக காங்கேசன்துறை முதல் புத்தளம் வரையிலும், மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
கடலின் நிலை:
மன்னார் வழியாக காங்கேசன்துறை முதல் புத்தளம் வரையிலும், மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
கொழும்பு வழியாக புத்தளம் முதல் காலி வரையான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 3.0 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.












