வெப்பமான வானிலை நிலவுவது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுத் துறையின் இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம், நாளை (09) முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பை இன்று (08) வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த அறிவிப்பு மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்குப் பொருந்தும்.
மேலும், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில், பகல் நேரங்களில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடல் உணரும் வெப்பநிலை, “கவனம்” தேவைப்படும் அளவில் நீடிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











