பழைய போகம்பர சிறைச்சாலை வளாகம் அதிகாரப்பூர்வமாக ஒரு சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானயக்காரவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலின்படி, பழைய போகம்பர வளாகத்தில் – ஒரு சிறைச்சாலையை அமைப்பதற்காகத் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை அமைச்சர் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காகப் பழைய போகம்பர வளாகம் ஒரு சிறைச்சாலையாகச் செயல்படும்.
சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2-ன் மூலம் அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.












