தங்களது கிளப்பின் அதிகாரப்பூர்வ லோகோவை (Badge) சமூக ஊடக விளம்பரம் ஒன்றில் தவறாகப் பயன்படுத்தியதற்காக, அலையன்ஸ் (Alliance) அரசியல் கட்சி தங்களிடம் “முழுமையான மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு” கேட்க வேண்டும் என்று லின்ஃபீல்ட் கால்பந்து கிளப் (Linfield FC) வலியுறுத்தியுள்ளது.
“துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல் தரக்கூடிய கொடிகளைக் கையாளுதல்” தொடர்பான புதிய மசோதா ஒன்றை விளம்பரப்படுத்துவதற்காக அலையன்ஸ் கட்சி சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது.
அந்தப் பதிவில் உள்ள ஒரு கொடியின் படத்தில், லின்ஃபீல்ட் கால்பந்து கிளப்பின் லோகோ பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், அதற்கு மேல் “சரியான சமநிலையை ஏற்படுத்துதல்” என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.
இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ள தெற்கு பெல்ஃபாஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் பவுலா பிராட்ஷா (Paula Bradshaw), இந்த விவகாரத்தால் ஏற்பட்ட “மனவருத்தங்களுக்காக” லின்ஃபீல்ட் கிளப்பிடம் மன்னிப்புக் கோரினார்.
இருப்பினும், அவரது இந்த மன்னிப்பை ஏற்க மறுத்த லின்ஃபீல்ட் கிளப் நிர்வாகம், தங்களுக்கு எவ்வித நிபந்தனையுமற்ற நேரடி மன்னிப்பு மட்டுமே வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இதேவேளை, “சட்டபூர்வமான கலாச்சார வெளிப்பாடுகள் குறித்த உரையுடன் இணைத்தே அந்த குறிப்பிட்ட கொடியின் படம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சிலர் அதனைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர் என அலையன்ஸ் (Alliance) அரசியல் கட்சி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.












