தமிழகத்தில் பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் பசுக்கள் பொது இடங்களில் வெட்டப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சூர்ய பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் எந்த நாளிலும் பசுக்கள் மற்றும் கன்றுகளை கொல்ல மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது.
எனவே, மே 28 பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாளோ, மறு நாளோ மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் பசுவோ அல்லது கன்றோ கொல்லப்படாமல் இருப்பதை தலைமைச் செயலாளரும் காவல் துறை தலைவரும் உறுதி செய்ய வேண்டும்’ என்று மே 27-ம் திகதி உத்தரவிட்டது.
மேலும், விலங்குகளைக் கொல்லுதல் என்பது அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.











