ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியாக அம்பலங்கொட பிரதேச சபையில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட உறுப்பினர், ஜூலை 24 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், காலி குற்றப்பிரிவு இவரை கடந்த 11 ஆம் திகதி கைது செய்தது.
அதன்படி, இன்று (13) அவர் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பலப்பிட்டிய நீதவான் பவித்ரா சஞ்சீவனி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.












