மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன், தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்குச் சில நாட்களுக்கு முன்பு அனுப்பிய இராஜினாமாக் கடிதத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும், அந்த இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்து ஜனாதிபதி இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் பேராசிரியர் அபயகோன் குறிப்பிட்டுள்ளார்.
தனது, இராஜினாமா முடிவுக்கான காரணம் தனிப்பட்ட காரணங்களே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் சரத் அபேகோன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் ஒரு காலகட்டத்தில் பணியாற்றியுள்ளார்.
இதற்கிடையில், மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் பதவியை வகித்த மஞ்சுள மதஹபொல அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அப்பதவியும் தற்போது காலியாக உள்ளது.
மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக, நிரந்தர நியமனம் செய்யப்படும் வரை அப்பதவியை வகிக்குமாறு நியமிக்கப்பட்டுள்ளார்.












