ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இன்று (30) இடம்பெற்ற ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேசிய சாம்பியனான ரூமேஷ் தரங்க தகுதி பெற்றார்.
தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த ருமேஷ் , 82.84 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்க வெற்றியாளர்களான இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் ஆகியோரும் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.
நீரஜ் 79.61 மீட்டர் தூரம் எறிந்து 5வது இடத்தையும், நதீம் 78.63 மீட்டர் தூரம் எறிந்து 7வது இடத்தையும் பிடித்தனர்.

















