2008 ஆம் ஆண்டு தெஹிவளையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில், இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடுமையான சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நீண்ட கால விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி, சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளித்தார்.
அந்த மோதலைத் தொடர்ந்து இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி, இந்த மூவருக்கும் எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
குற்றம்சாட்டப்பட்ட மூன்றாம் நபருக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகளுக்குத் தலா மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.















