வலிமைமிக்க பிரஜை- வெற்றிகரமான மக்கள் எனும் தொனிப்பொருளில் தையிட்டி ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கான கரப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே பிரதம விருந்தினராக கலந்து கொண்டு, இன்று (2) அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
8.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மீள்குடியேற்ற பகுதியான தையிட்டி பகுதியில் இந்த அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக இப்பகுதி மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில் இருந்ததுடன், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்னர் எந்த அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
இளைஞர்களை விளையாட்டு துறையில் ஊக்குவிக்கும் நோக்கில், இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாதுஇ விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக முதன் முதலாக தையிட்டி பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் அமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சறிபவானந்தராஜ், கருணாகரன் இளங்குமரன் உட்பட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
















