மத்திய மாகாணத்தில் உள்ள ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை அதிபர்களுக்கு, நிலவும் மோசமான வானிலைக்கேற்ப பாடசாலைகளைத் திறந்தே வைப்பதா அல்லது மூடுவதா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தத்தமது பகுதிகளில் நிலவும் வானிலை நிலவரத்தின் அடிப்படையில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்தார்.














