மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ ஆக இருக்கும்.
ஹம்பாந்தோட்டை வழியாக காலி முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
கொழும்பு மற்றும் காலி வழியாக புத்தளம் முதல் காலி வரையிலும், திருகோணமலை வழியாக மட்டக்களப்பு முதல் முல்லைத்தீவு வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
கடல் நிலை:
ஹம்பாந்தோட்டை வழியாக காலி முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும்.
அடுத்த அறிவிப்பு வரும் வரை இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படையினரும் மீனவர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கொழும்பு மற்றும் காலி வழியாக புத்தளம் முதல் காலி வரையிலும், திருகோணமலை வழியாக மட்டக்களப்பு முதல் முல்லைத்தீவு வரையிலும் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0-2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம்.













