இரத்மலானை பகுதியில் உள்ள ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த வீட்டினை இலக்காகக் கொண்டு இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று வெடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.













