பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா பெரஹராவின் பாவட பெரஹரா, 2026.08.13 ஆம் திகதி இரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.
அக் காலப்பகுதியில் 119 மஹரகம – தெஹிவளை பஸ் பாதையில், பொரலஸ்கமுவை நகரம் மற்றும் பெல்லன்தர சந்தி ஆகிய பகுதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாற்று வீதிகள்
- மஹரகமவிலிருந்து தெஹிவல நோக்கியும், பிலியந்தலையிலிருந்து தெஹிவளை நோக்கியும் பயணிக்கும் வாகனங்கள் பெப்பிலியான சந்தியை அடைந்து இடதுபுறம் திரும்பி, ஸ்பார் சுற்றுவட்டம் ஊடாக பெல்லன்தர நோக்கிச் சென்று, நெதிமால ஊடாக தெஹிவளை நோக்கிப் பயணிக்க முடியும்.
- மேலும், பொரலஸ்கமுவை மற்றும் காலி வீதியை இணைக்கும் வெரஹெர சந்தியிலிருந்து கங்காராம வீதி ஊடாக கொளுமடம சந்தி வரை செல்லும் மாற்று வீதியைப் பயன்படுத்தி காலி வீதியை அடைய முடியும்.







