16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சொந்தமானவை எனக் கருதப்படும் 7,56,000 அவுஸ்திரேலியக் கணக்குகளை மெட்டா (Meta) முடக்கியுள்ளது.
சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான உலகின் முதல் தடையை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் அந்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விவரத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
2025 டிசம்பர் மற்றும் 2026 ஜூன் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நீக்கப்பட்ட அந்த 4,62,000 கணக்குகள் இன்ஸ்டாகிராமிலும், 2,94,000 கணக்குகள் ஃபேஸ்புக்கிலும் இருந்ததாக அந்நிறுவனம் கூறுகிறது.
16 வயதுக்குட்பட்டவர்கள் முக்கிய சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் முழுமையாகத் தடை செய்த முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறிய நிலையில், இந்தத் தடை உத்தரவு 2025 டிசம்பர் 10 அன்று நடைமுறைக்கு வந்தது.
இவ்விதிகள் மெட்டாவின் (Meta) ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுடன் டிக்டாக், யூடியூப், ஸ்னாப்சாட் மற்றும் பிற தளங்களுக்கும் பொருந்தும்.
மேலும், விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான பொறுப்பை இவை பெற்றோர்கள் மீது சுமத்தாமல், அந்தந்தச் சமூக ஊடகத் தளங்கள் மீதே முழுமையாகச் சுமத்துகின்றனமையும் குறிப்பிடத்தக்கது.







