கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கைவிடப்பட்ட நான்கு வயது சிறுமியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
வத்தேகமவில் உள்ள யதிராவன சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இன்று (13) குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் அவசர எண்ணுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வத்தேகம பொலிஸ் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று குழந்தையை பொலிஸாரின் காவலில் எடுத்தனர்.
காலை 7 மணியளவில் ஒரு முச்சக்கர வண்டியில் அச்சிறுமி அந்த இடத்தில் கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குழந்தையை ஏற்றி வந்ததாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தனது குடும்பத்தைப் பற்றியோ அல்லது தான் வசிக்கும் இடத்தைப் பற்றியோ அச்சிறுமிக்கு எந்தத் தகவலும் தெரியாது என பொலிஸார் கூறுகின்றனர்.
அச்சிறுமி கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் இச்சம்பவம் குறித்து வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







