நாடு முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் தொடங்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று (13) 26,882 பேர் சோதனையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நேற்று சோதனையிடப்பட்டவர்களில், 527 சந்தேக நபர்களையும், குற்றச்செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 26 பேரையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் கீழ், 126 பிடியாணைதாரர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் எடுத்துள்ளனர்.
மேலும், போதைப்பொருள் பவித்துவிட்டு வாகனம் செலுத்திய 50 பேரையும், கவனயீனமாக வாகனம் செலுத்திய 101 பேரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும்பொலிஸார் எடுத்துள்ளனர்.
அத்துடன், ஏனைய போக்குவரத்து விதிமீறல்களுக்காக 4,316 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.








