நிலநடுக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இந்தோனேசியாவின் ஃப்ளோரஸ் (Flores) பிராந்தியத்தில் திங்களன்று (17) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 5.9 ரிக்டர் அளவு கொண்டதாக இருந்ததாக ஜெர்மனியின் GFZ புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் வெறும் 10 கி.மீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது.
ஆகஸ்ட் 15 அன்று அதே பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, குறைந்தது 53 பேர் உயிரிழந்ததுடன் பரவலான சேதங்களையும் ஏற்படுத்திய சில நாட்களிலேயே இது நிகழ்ந்துள்ளது.
அந்த நிலநடுக்கமானது கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள ‘எண்டே’ (Ende) பகுதிக்கு வட-வடமேற்கே சுமார் 68 கிலோமீட்டர் தொலைவிலும், ஏறக்குறைய 10 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது.
அன்று ஒரே நாளில் அப்பகுதியில் 230-க்கும் மேற்பட்ட தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டன; அவற்றில் மிக வலிமையானது 6.2 ரிக்டர் அளவாகப் பதிவாகியிந்தது.














