கிழக்கு ஹங்கேரியில், 57 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற போலந்து நாட்டுப் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததுடன், குறைந்தது 10 பேர் படுகாயமடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை சுமார் 1 மணியளவில் அப்பேருந்து சாலையோரக் பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்ததாக, ஹங்கேரியப் பிரதமர் பீட்டர் மக்யார் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.
தென்கிழக்கு போஸ்னியாவில் உள்ள மெட்ஜுகோர்ஜேவில் (Medjugorje) அமைந்திருந்த கன்னி மரியாளின் திருத்தலத்திலிருந்து, இரண்டு சாரதிகளைக் கொண்டிருந்த அந்தப் பேருந்து போலந்திற்குத் திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள நான்கு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.













