இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) வரும் வாரங்களில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த கலந்துரையாடல்கள் முக்கிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது பயணத்தின்போது, பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்த, ஆகியோரையும் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் அது குறித்து மேலும் விவாதிப்பது ஆகியவற்றிலும் இந்த வருகை கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரண்டு வாரங்களுக்கு முன்பு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு, மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் எடுத்துரைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.














