பண்டாரகம பகுதியில் 18 கிலோ 672 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்வில (Maswila) பகுதியைச் சேர்ந்த பொலிஸ் விசேட படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபராவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேற்கொள்ளவுள்ளது.













