பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் 46 வயதுடைய நபர் ஒருவர் (TID) கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) பயிற்சி முகாம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத மற்றும் போலியான தகவல்களை சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட காணொளி மற்றும் ஊடக அறிக்கை தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, குறித்த நபர் நேற்று (18) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பளை பகுதியில் உள்ள காப்புக்காட்டுக்குள் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக சந்தேக நபர் சமூக ஊடகங்களின் வாயிலாக கூறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரால் பரப்பப்பட்ட அந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை அல்லது அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொரலெஸ்கமுவ, பெல்லன்வில பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், இன்று (19) கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.













