முன்னாள் அமைச்சரும் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
அவரது குடும்பத்திற்குச் சொந்தமான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் ஒன்றின் இரண்டாவது மாடியிலிருந்து அவர் கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று (19) காலை உயிரிழந்தார்.
அவரது பூதவுடலை தனமல்விலவில் உள்ள அவர்களது வீட்டிற்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.














