கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட யோர்க் வீதியில் (York Street), பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டவர் ஒருவர் பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் வியாழக்கிழமை (20) இடம்பெற்றது.
புறக்கோட்டை (Pettah) பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து, வீதியைக் கடக்க முயன்ற அந்த நபர் மீது மோதியதாகக் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனால், படுகாயமடைந்த அவர் உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த வெளிநாட்டவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டைப் பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












