நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேல் பிரிவு தோட்டபகுதியில் மரம் வெட்டி கொண்டிருந்த நபர் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த நபர் உயிர்ழந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை 4.30மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேல் பிரிவு தோட்ட பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேலை மரத்தின் பாரிய கிளை ஒன்று முறிந்து இந்த நபரின் தலைப்பகுதியில் விழுந்துள்ளது.
காயங்களுக்கு உள்ளான நபரை பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர்ழந்துள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பில் உயிர்ழந்த நபர் 52வயதுடைய கண்டி பகுதியை சேர்ந்த ஆர்.பி.பி.சரத்வீரசிங்க என்பரே உயிர்ழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் இருந்து சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்கு டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













